ADDED : ஆக 08, 2025 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புனே:வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் டாடா குழுமத்தின் 'டாடா ஆட்டோகாம்ப்' நிறுவனம், உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் ஐ.ஏ.சி.,குழும நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்துவதாக அறிவித்து உள்ளது.
இதை, பிரிட்டனில் உள்ள துணை நிறுவனமான 'ஆர்ட்டிபெக்ஸ் இன்டீரியர் சிஸ்டம்ஸ்' நிறுவனத்தின் வாயிலாக கையகப்படுத்தியது.
இதனால், டாடா ஆட்டோகாம்ப் நிறுவனத்தின் ஐரோப்பிய இருப்பை விரிவுபடுத்தி உள்ளது.