சோலார் மின்திறன் மையம் அரசுடன் டாடா பவர் ஒப்பந்தம்
சோலார் மின்திறன் மையம் அரசுடன் டாடா பவர் ஒப்பந்தம்
ADDED : ஜூன் 05, 2025 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்துடன் இணைந்து, டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா பவர் நிறுவனம், சூரியசக்தி மின் சாதன திறன் பயிற்சி மையங்களை அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், டாடா பவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் இடையில் கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஒப்பந்தம் வாயிலாக, திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, துாத்துக்குடி, விருதுநகர், சாத்துார் ஆகிய இடங்களில், அரசு ஐ.டி.ஐ.,களில் சூரியசக்தி மின்சார திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சூரியசக்தி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தொடர்பாக, மாணவர்களுக்கு அங்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.