தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/‘டாடா சன்ஸ் பட்டியலிட கால அவகாசம் தேவை’

‘டாடா சன்ஸ் பட்டியலிட கால அவகாசம் தேவை’

‘டாடா சன்ஸ் பட்டியலிட கால அவகாசம் தேவை’


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: டாடா சன்ஸ் நிறுவனத்தை பட்டியலிட கூடுதல் அவகாசம் தேவை என்று எஸ்.பி.ஐ., வங்கியின் முன்னாள் துணை தலைவர் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

நீண்டகால முடிவுகளை பட்டியலிடப்படாத நிறுவனத்தால் துணிச்சலாக எடுக்க முடியும். கடந்த 2001ல் டாடா பைனான்ஸ் நெருக்கடியின்போது முதலீட்டாளர்களின் 875 கோடி ரூபாய் பணத்தை காப்பாற்ற 615 கோடி ரூபாயை டாடா குழுமம் வழங்கியது.

டாடா டெலிசர்வீசஸ் நஷ்டமடைந்த போதும், 45,000 கோடி ரூபாய் வரை பொறுப்பேற்று கடன்களை அடைத்தது.

தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை சீரமைக்க தொடர் முதலீடு தேவைப்படும் நிலையில், டாடா சன்ஸ் உடனடியாக பட்டியலிடப்பட்டால் அத்தகைய முதலீடுகளை செய்வதில் சிக்கல் எழும்.

எனவே, அந்நிறுவனத்தை உடனடியாக பட்டியலிட வற்புறுத்தாமல், ஏர் இந்தியா சீரமைப்பு பணிகளுக்காக கூடுதல் கால அவகாசம் வழங்குவதே நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு நல்லது.

இவ்வாறு கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us