வருமான கணக்கு தாக்கல் அவகாசம் நீட்டிக்க கோரும் வரி ஆலோசகர்கள்
வருமான கணக்கு தாக்கல் அவகாசம் நீட்டிக்க கோரும் வரி ஆலோசகர்கள்
ADDED : செப் 25, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வருமான வரிக் கணக்கு தாக்கல், வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு அனைத்திந்திய வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது:
பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தொழில்நுட்ப கோளாறு, விதிமுறைகள் தொடர்பான சவால்கள் ஆகியவை காரணமாக வரி செலுத்துவோர் மற்றும் ஆலோசகர்களால் உரிய நேரத்தில் வரிதாக்கல் செய்ய இயலவில்லை. எனவே, அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்திருந்தது.