ADDED : ஜன 01, 2025 07:07 AM

புதுடில்லி:  காலக்கெடுவுக்குள் வருமான கணக்கை தாக்கல் செய்யத் தவறிய, அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு வரி செலுத்த வாய்ப்பளிக்கும் திட்டத்தின் கெடு, மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
'விவாத் சே விஸ்வாஸ்' திட்டத்தின் கீழ் வட்டி மற்றும் அபராதமின்றி வரி பாக்கியை செலுத்துவதற்கான காலக்கெடுவை, ஜனவரி 31ம் தேதி வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.
விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தை, கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இது, தற்போது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நேரடி வரி வழக்கு தகராறுகளை வட்டி அல்லது அபராதம் எதுவும் இன்றி தீர்க்க, வாழ்நாளில் ஒரு முறை வரி செலுத்துவோருக்கு வாய்ப்பளிக்கும் திட்டம் இது.
இத்திட்டத்தின் கீழ், செலுத்த வேண்டிய தொகையை நிர்ணயம் செய்வதற்கான காலக்கெடுவை, மத்திய நேரடி வரிகள் வாரியம் 2024 டிசம்பர் 31ம் தேதியை கடைசி நாளாக அறிவித்திருந்த நிலையில், தற்போது நீட்டித்துள்ளது.

