UPDATED : ஜூலை 28, 2025 07:57 AM
ADDED : ஜூலை 28, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கடந்தாண்டு பட்ஜெட்டில் மாற்றியமைக்கப்பட்ட, குறைந்த மதிப்பிலான வருமான வரி வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நேரடி வரிகள் வாரியத்தை வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், புதிய வரம்பை காட்டிலும் குறைவாக உள்ள அனைத்து வழக்குகளையும் அடையாளம் கண்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளாக இவற்றை திரும்பப் பெறுமாறு வரித்துறையினரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இதன் காரணமாக 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2.25 லட்சம் வழக்குகள் திரும் பப் பெறப்பட உள்ளன.