ADDED : மே 27, 2025 09:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வரும் ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் வரிச் சலுகை வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் 18,233 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் சரக்கு ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக, ஏற்றுமதி பொருட்கள் மற்றும் அவற்றின் உள்ளீட்டு பொருட்களின் மீதான பல்வேறு மத்திய - மாநில அரசு வரிகளை 'ரோட்டெப்' என்ற திட்டத்தின் வாயிலாக, மத்திய அரசு திருப்பி அளித்து வருகிறது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம் கடந்த பிப்., 6ல் நிறுத்தப்பட்டது.