ADDED : டிச 02, 2025 12:41 AM

திருப்பூர்: பருத்தி சீசன் துவங்கிய இரண்டு மாதங்களில், 44.12 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்தது. பஞ்சு வரத்தில், தெலுங்கானா முதலிடத்தில் இருக்கிறது.
நம் நாட்டில் புதிய பருத்தி ஆண்டான 2025 அக்., - 2026 செப்., துவக்கத்தில் இருந்தே, பஞ்சு வரத்து துவங்கியது. இரண்டாவது மாதம், வரத்து இரட்டிப்பாக உயர்ந்தது.
அக்., மாதம், 13.85 லட்சம் பேல்(ஒரு பேல் - 170 கிலோ); நவ., மாதம் 30.27 லட்சம் பேல் வந்தது.
சீசன் துவக்கத்தில், பஞ்சு வரத்தில், ஆந்திரா முதலிடம்; கர்நாடகா 2வது இடம்; குஜராத் 3வது இடத்தில் இருந்தது.
கடந்த மாதம், 5.37 லட்சம் பேல் பஞ்சு வரத்துடன், தெலுங்கானா முதலிடத்துக்கு முன்னேறியது.
குஜராத், 4.79 லட்சம் பேல் வரத்துடன் 2வது இடத்திலும், 4.36 லட்சம் பேல் வரத்துடன் மஹாராஷ்டிரா 3வது இடத்திலும் இருக்கிறது.
ஜவுளி உற்பத்தியில் வேகம் கூடாமல் இருப்பதால், மிதமான அளவு பஞ்சு கொள்முதல் நடந்து கொண்டிருக்கிறது. நுாற்பாலைகளுக்கும், ஏற்றுமதியாளரின் ஆர்டர்கள் மந்தமாக இருக்கின்றன.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் (டாஸ்மா) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''நடப்பு ஆண்டில், சீரான அளவில் பருத்தி மகசூல் கிடைக்கும். ஜன. மாதத்துக்கு பின் வரத்து மேலும் அதிகரிக்கும். இரண்டு மாதங்களில், 44.12 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது,'' என்றார்.
பஞ்சு விலை, ஒரு கேண்டி (365 கிலோ) 51,000 முதல் 52,000 ரூபாய் வரை விற்பனை

