ADDED : ஜூன் 21, 2025 01:46 AM

புதுடில்லி:கடந்த மார்ச் காலாண்டில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஏ.ஜி.ஆர்., எனும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய், 12.44 சதவீதம் அதிகரித்து 79,226 கோடி ரூபாயாக இருந்ததாக, தொலைத்தொடர்பு ஒழுங்முறை ஆணையமான 'டிராய்' தெரிவித்துள்ளது.
இதில் 29,464 கோடி ரூபாய் பங்குடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. எனினும், சதவீதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, 25.64 சதவீத வளர்ச்சியுடன், பார்தி ஏர்டெல் முன்னணி வகிக்கிறது.
கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனங்களின் மொத்த வருவாய் 98,250 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் இருந்து தான், உரிமக் கட்டணம் மற்றும் அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணத்தை மத்திய அரசு வசூல் செய்து வருகிறது.
கடந்த மார்ச் காலாண்டில், அரசின் உரிமக் கட்டண வருவாய் 12.46 சதவீதம் அதிகரித்து, 6,340 கோடி ரூபாயாகவும்; அலைக்கற்றை பயன்பாட்டு கட்டண வருவாய் 15.08 சதவீதம் அதிகரித்து, 1,000 கோடி ரூபாயாகவும் இருந்தது.