ADDED : ஜூலை 11, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை:இந்தியாவில் தன் முதல் ஷோரூமை, மும்பையில், வரும் 15ம் தேதி திறக்க இருப்பதாக, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகனச் சந்தையான இந்தியாவில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டெஸ்லா நிறுவனம் விற்பனையை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் கார்கள் விற்பனை கடும் சரிவை கண்ட நிலையில், இந்திய சந்தையில் டெஸ்லா நுழைகிறது.
இந்தியாவில் விற்பனை செய்வதற்காக, முதற்கட்டமாக ஷாங்காய் ஆலையில் இருந்து '5 ஒய்' ரக கார்களை டெஸ்லா இறக்குமதி செய்துள்ளது.

