தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ குறுஞ்செய்திகள்

குறுஞ்செய்திகள்

குறுஞ்செய்திகள்


ADDED : மார் 29, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 01:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடப்பு கணக்கு பற்றாக்குறை டிசம்பர் காலாண்டில் அதிகரிப்பு




நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்ததன் காரணமாக, இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 98,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு, இதே காலத்தில், நடப்புக் கணக்கு பற்றாக்குறை 88,400 கோடி ரூபாயாக பதிவாகி இருந்தது.


சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றமில்லை



வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடர்ச்சியாக 5வது முறையாக மாற்றமின்றி தொடரும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன்படி, சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கு 8.20 சதவீதமும், பி.பி.எப்., திட்டத்துக்கு 7.10 சதவீதமும், அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு 4 சதவீதமாக வட்டி விகிதம் தொடரும்.

முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி பிப்ரவரியில் 2.90 சதவீதமாக சரிவு



நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த பிப்ரவரியில் 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு காலத்தில், 7.10 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், நடப்பாண்டு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி சரிந்ததால் எதிர்மறையான வளர்ச்சியை கண்டுள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தி குறியீட்டில், 8 துறைகளின் பங்களிப்பு 40.27 சதவீதமாக இருப்பதாக உள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us