அமெரிக்காவுக்கு ஜவுளி ஏற்றுமதி இந்தியாவுக்கு வாய்ப்பு: எஸ்.பி.ஐ.,
அமெரிக்காவுக்கு ஜவுளி ஏற்றுமதி இந்தியாவுக்கு வாய்ப்பு: எஸ்.பி.ஐ.,
ADDED : ஜூலை 15, 2025 10:33 PM

புதுடில்லி:அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பான சிக்கல்களுக்கு மத்தியிலும், அந்நாட்டுக்கு, இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவுக்கான ஜவுளி ஏற்றுமதியில் தற்போது 6 சதவீதம் பங்களிப்பை கொண்டுள்ள இந்தியா, போட்டி நாடுகளிடம் இருந்து கூடுதலாக 5 சதவீதம் பங்களிப்பை கையகப்படுத்த இயலும். இதன் வாயிலாக நாட்டின் ஜி.டி.பி.,யில் 0.1 சதவீதம் அதிகரிக்கும்.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில், வியட்நாம் தவிர்த்து பங்களாதேஷ், கம்போடியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய போட்டி நாடுகள், அமெரிக்காவின் தற்போதைய வரி விதிப்புகளால் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்த சூழலை பயன்படுத்தி, அந்த நாடுகளின் ஏற்றுமதி பங்களிப்பை இந்தியா கைப்பற்றலாம்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.