ADDED : நவ 30, 2024 11:16 PM

புதுடில்லி:ஆட்டோ எக்ஸ்போ - 2025 வாகன கண்காட்சி, 'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ' என்ற பெயரில், வரும் ஜனவரி 17 முதல் 22ம் தேதி வரை, டில்லியின் பாரத் மண்டபத்தில் நடக்க இருக்கிறது.
வாகன கண்காட்சி பல்வேறு பெயர்களில் நடப்பதால், குழப்பங்களை தவிர்க்க ஒரே பெயரில் நடத்தப்படுகிறது.
இம்முறை 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளன. சில சொகுசு கார் நிறுவனங்கள் உட்பட, நாட்டின் 10 முக்கிய கார் நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்து கொள்கின்றன.
முதல் முறையாக, வியட்னாம் நாட்டின் 'வின்பாஸ்ட்' மற்றும் சீனாவின் பி.ஒய்.டி., ஆகிய மின்சார கார் நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. உள்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான இருசக்கர வாகன நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
இதற்கிடையே, ஜனவரி 18 முதல் 21 வரை, டில்லியின் துவாரகா பகுதியில் வாகன உதிரிபாக கண்காட்சியும் நடைபெற உள்ளது.

