ADDED : ஜன 04, 2025 12:15 AM

15.60 சதவீதம்
கடந்த 2024 அக்டோபர் 1ம் தேதி முதல் துவங்கிய கரும்பு பருவத்தின் முதல் காலாண்டில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 15.60 சதவீதம் சரிந்து, 95.40 லட்சம் டன் ஆனது. கடந்த பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 291 லட்சம் டன்களாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 280 லட்சம் டன்களாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
5,03,000 டன்
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி, 9 மாதங்களில் இல்லாத வகையில், 40 சதவீதம் சரிந்து, 5.03 லட்சம் டன்னாக இருந்தது. விலை உயர்வால், பாமாயிலுக்கு மாற்றாக, குறைந்த விலையில் கிடைக்கும் சோயா பீன் எண்ணெய் அதிகளவில் இறக்குமதி ஆனதே இதற்கு காரணம் என, வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
8,85,000 சதுர அடி
கடந்தாண்டில், நாட்டின் அலுவலக குத்தகைக்காக எடுக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பு 885.20 லட்சம் சதுர அடி. முந்தைய ஆண்டில் 745.60 லட்சம் சதுர அடியாக இருந்தது. எட்டு முக்கிய நகரங்களில், பணியிடத்துக்கான மொத்த குத்தகை 19 சதவீதம் அதிகரித்ததாக ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான குஷ்மேன் அண்டு வேக்பீல்ட் தரவுகள் தெரிவித்துள்ளன.

