ADDED : ஜன 05, 2025 12:16 AM

20,000 கோடி
ஆயுள் காப்பீட்டுத் துறையில் உரிமை கோரப்படாத மொத்த தொகை. 2023 துவக்கத்தில் இது 22,237 கோடி ரூபாயாக இருந்த நிலையில், உரியவர்களை விரைவாக அடையாளம் கண்டு, தொகையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டதால், கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் ஒப்படைக்கப்பட்டதாக ஐ.ஆர்.டி.ஏ., தெரிவிக்கிறது.
14 சதவீதம்
கடந்த நவம்பர் வரை, நிதியாண்டின் 8 மாதங்களில், பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு இது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் 66,470 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்த நிலையில், 2024ல் அது, 75,650 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்திய பொறியியல் பொருட்களை அதிக இறக்குமதி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.
6,54,000 கோடி
கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை, இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட பயணியர் எண்ணிக்கை இது. முந்தைய ஆண்டின் இதே 11 மாதங்களுடன் ஒப்பிடும்போது 11.40 சதவீதம் அதிகம். நவம்பர் 17ம் தேதி, உள்நாட்டு விமான பயணம் மேற்கொண்டவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் 5 லட்சத்தை தொட்டது.

