ADDED : ஜன 24, 2025 12:13 AM

தெலுங்கானாவில் உள்ள தரவு மையங்களின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த, 'அமேசான் வெப் சர்வீசஸ்' முதலீடு செய்ய உள்ள தொகை இதுவாகும். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில், அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனத்தின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற சந்திப்பில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் மூன்று மையங்கள் ஏற்படுத்தப்பட்டு ஏற்கனவே செயல்படுத்தி வரும் அமேசான், மேலும் ஒரு மையத்தை ஹைதரபாதில் உருவாக்க உள்ளது.
ரூ.12,000 கோடி
இந்தியாவின் முதல் ஒளியியல் பூங்காவை மஹாராஷ்டிராவில் அமைக்க, 'பராஸ் டிபென்ஸ் அண்டு ஸ்பேஸ் டெக்னாலஜிஸ்' நிறுவனம் முதலீடு செய்ய உள்ள தொகை இது. இத்திட்டம், வரும் 2028 முதல் 2035ம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் வாயிலாக 2,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், பாதுகாப்பு, விண்வெளி, வாகனம், தொழில்துறை மற்றும் வணிக பயன்பாடுகள் போன்ற முக்கிய பிரிவுகளில் தொழில் முன்னேற்றங்களை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.70,000 கோடி
கடற்படையின், 'ப்ராஜெக்ட் 75 இந்தியா' திட்டத்தின் கீழ், ஆறு மேம்பட்ட நீர் மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான 70,000 கோடி ரூபாய் டெண்டரில் இருந்து, எல் அண்டு டி., நிறுவனத்தை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது. ஸ்பெயின் நிறுவனமான நவனிதாவுடன் இணைந்து, எல் அண்டு டி., இந்த ஒப்பந்தத்திற்கு முன்மொழிந்திருந்த நிலையில், இந்திய கடற்படை தேவைகளுக்கு இணக்கமாக அது இல்லாததால், அமைச்சகம் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

