ADDED : பிப் 16, 2025 01:58 AM

69,600
அமெரிக்க பொருளாதாரத்திற்கு, மூன்று லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள், ஆண்டுதோறும் 69,600 கோடி ரூபாய்க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருவதுடன், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு களை உருவாக்க உதவியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
55.53
இந்திய அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்த 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 66,555 கோடி ரூபாய்
அதிகரித்து, 55.53 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தங்க கையிருப்பும் 11,484 கோடி ரூபாய்
அதிகரித்து, 6.28 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
400
மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை 400 லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழ் சரிந்தது. இது, கடந்த 2024 ஜூன் 6ம் தேதிக்கு பின் மிக குறைந்த அளவாகும்.
1,00,000
கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் இந்திய சந்தைகளில் இருந்து 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை, அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்று உள்ளனர். இம்மாதம் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலான கடந்த வாரத்தில் மட்டும், 13,930 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.
20
ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் மற்றும் ஐ.டி.எப்.சி., உட்பட 20 வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தங்கள் பதிவு சான்றிதழை ஒப்படைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ், மனோவே இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகியவை, வணிகத்தில் இருந்து வெளியேறியதால் தங்கள் சான்றிதழ்களை திருப்பி ஒப்படைத்துள்ளன. இவை தவிர, 17 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பதிவு சான்றிதழ்களை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
2,000
புதிய பங்கு வெளியீடு வாயிலாக இன்னோவேட்டிவியு இந்தியா நிறுவனம், 2,000 கோடி ரூபாய்
நிதி திரட்ட உள்ளது. இதற்காக செபியிடம் இந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம் நாடு தழுவிய அளவில் நடைபெறும்
தேர்தல் மற்றும் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு சேவைகளை அளித்து
வருகிறது.

