ADDED : பிப் 18, 2025 11:34 PM

8,475
பங்கு சந்தையில் பார்தி ஏர்டெல் பங்குகள் விற்பனை வாயிலாக, அதன் முதலீட்டு நிறுவனங்களுள் ஒன்றான ஐ.சி.ஐ.எல்., எனப்படும் 'இண்டியன் கான்டினென்ட் இன்வெஸ்ட்மென்ட்' பெற்ற தொகை 8,475 கோடி ரூபாய். இந்நிறுவனம் விற்பனை செய்த பங்குகளில், 24 சதவீதம் பங்குகளை பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளரான பார்தி டெலிகாம் நிறுவனமே திரும்ப வாங்கி உள்ளது. இதன் வாயிலாக, பார்தி டெலிகாம் வசமுள்ள மொத்த பங்குகள், 40.47சதவீதமாக அதிகரித்துள்ளது.
250
எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்ட், பேடிஎம் மற்றும் பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., உடன் இணைந்து, 'ஜன் நிவேஷ்' திட்டத்தின் கீழ் துவக்கியுள்ள சிறியளவிலான எஸ்.ஐ.பி., எனப்படும் சீரான முதலீடு திட்டத்தின் ஆரம்ப தொகை இது. முதல் தலைமுறை முதலீட்டாளர்கள், கிராம மற்றும் நகர்ப்புறங்களை சேர்ந்த சிறு சேமிப்பாளர்கள், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

