ADDED : ஜூன் 02, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
98.26%
கடந்த மே மாதம் 19ம் தேதி நிலவரப்படி, திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளில், 98.26 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது-.
இதையடுத்து, கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலகட்டத்தில், புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, 6,181 கோடி ரூபாயானது.
40%
கடந்த 2025ம் நிதியாண்டில், உலகளாவிய விமான நிறுவனங்களின் நிகர லாபம் 3.06 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்து உள்ளது.
இது, கடந்த 2024ல் 2.75 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட, விமான பயணச் செலவு 40 சதவீதம் தற்போது குறைவு.