ADDED : ஜூலை 08, 2025 11:15 PM

1,70,000
இந்தியா - வியட்நாம் இடையேயான இருதரப்பு வர்த்தகம், ஆண்டுக்கு 30 சதவீதம் அதிகரித்து 1.70 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என இந்தியாவுக்கான வியட்நாம் துாதர் நியுயென் தான் ஹை தெரிவித்துள்ளார். தற்போது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை வலுப்படுத்த உகந்த சூழல் நிலவுவதாக அவர் தெரிவித்தார். இரு நாடுகள் இடையே கடந்த 2024ம் ஆண்டில் வர்த்தகம், 1.28 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
21,000
நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், பாஸ்டேக் வாயிலாக வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணம் 20 சதவீதம் அதிகரித்து, 21,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 17,280 கோடி ரூபாயாக இருந்ததாக, தேசிய மின்னணு சுங்க கட்டண வசூல் தரவுகள் தெரிவிக்கின்றன.
500
கர்நாடகாவைச் சேர்ந்த, எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் மற்றும் உற்பத்தி நிறுவனமான கேய்ன்ஸ் டெக்னாலஜிஸ், 500 கோடி ரூபாய் முதலீட்டில், கேரளாவின் பெரும்பாவூர் தொழில்துறை பூங்காவில் ஆலையை அமைக்கவுள்ளது. இதற்காக, கேரள மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்நிறுவனம் கையெழுத்திட்டு உள்ளது. இதன் வாயிலாக,
2,000 பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.