ADDED : ஜூலை 21, 2025 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
750
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பிரிகேட் என்டர்பிரைசஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'பிரிகேட் ஹோட்டல் வெஞ்சர்ஸ்' புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 750 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான பங்கு விற்பனை நாளை மறுநாள் துவங்க உள்ளது. இந்நிறுவனம் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஹோட்டல் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.
1,161
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்,
'தி ஹண்ரட்' எனும் பெயரில் தொழில்முறை கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் லண்டனை தளமாகக் கொண்ட 'நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ்' என்ற கிரிக்கெட் அணி நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை, கிட்டத்தட்ட 1,161 கோடி ரூபாய்க்கு வாங்க, சன் டிவி குழுமத்திற்கு அதன் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

