ADDED : ஆக 06, 2025 01:11 AM

13
பருத்தி உற்பத்தியில் முன்னணி மாநிலமான குஜராத்தில், பருத்தி சாகுபடி பரப்பளவு கடந்த 4ம் தேதி நிலவரப்படி, 13 சதவீதம் குறைந்து, 20.35 லட்சம் ஹெக்டேரானதாக, மத்திய வேளாண் அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில், 23.35 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
5,00,00,000
காப்பீட்டு விதிமுறைகளை மீறியதற்காக, பாலிசிபஜார் காப்பீட்டு முகவர்களுக்கு, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு துவக்கப்பட்டதில் இருந்து, பாலிசிபஜார் 4.2 கோடிக்கும் அதிகமான பாலிசிகளை விற்பனை செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
30,444
கடந்த 2024- 25ல் வருமான வரித்துறையினர், 1,437 குழுக்கள் வாயிலாக மேற்கொண்ட 465 ஆய்வுகளில், கணக்கில் காட்டப்படாத 30,444 கோடி ரூபாய் வருமானம் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் விளைவாக 2,504 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.