ADDED : ஆக 09, 2025 01:03 AM

லாரி வாடகை
நாட்டின் முக்கிய சரக்கு போக்குவரத்து வழித்தடங்களில், கடந்த மாதம் லாரி வாடகை அதிகரிக்கவில்லை என, ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டில்லி - மும்பை, டில்லி - கொல்கட்டா, மும்பை - சென்னை ஆகிய முக்கிய வழித் தடங்களில், சரக்கு போக்குவரத்து செலவு கடந்த ஜூன் மாதத்தைப் போலவே ஜூலையிலும் தொடர்ந்தது என்றும்; பெங்களூரு - மும்பை வழித்தடத்தில் மட்டும் 2.30 சதவீதம் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி லாபம்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பொதுத்துறை வங்கிகள் 44,218 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. இது கடந்த நிதியாண்டின் 39,974 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகம். மொத்த லாபத்தில் 43 சதவீதத்துடன் எஸ்.பி.ஐ., முதலிடம் வகிக்கிறது. இது 19,160 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தவிர மற்ற 11 பொதுத்துறை வங்கிகளின் லாபமும் அதிகரித்துள்ளது.