ADDED : ஆக 12, 2025 06:58 AM
20
கேரளாவின் ஸ்டார்ட்அப் தொழில், ஆண்டுதோறும் 20 சதவீதம் என்ற வேகமான வளர்ச்சியுடன், 3,500 நிறுவனங்களுக்கு ஆதரவளித்து வருகிறது என, ஸ்டார்ட்அப் ஜீனோமின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கேரள ஸ்டார்ட்அப் மிஷன், 5,786 கோடி ரூபாய் நிதியுதவியுடன்; 6,400க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவளித்துள்ளதுடன், 65,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
34
ஜூன் காலாண்டில் பெய்த பருவம் தவறிய மழையால், பட்டியலிடப்பட்ட ஏ.சி., தயாரிப்பு நிறுவனங்கள், வருவாயில் 34 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்தாண்டு இதே காலாண்டில், கடுமையான மற்றும் நீண்ட கோடை காலம் இருந்ததால், ஏ.சி., விற்பனை சாதனை அளவை எட்டியிருந்தது.
81
கடந்த ஜூலையில் பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு, 81 சதவீதம் அதிகரித்து 42,702 கோடி ரூபாயானதாக, இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 'தீமெடிக்' எனும் குறிப்பிட்ட துறை சார்ந்த மியூச்சுவல் பண்டுகள் மற்றும் ப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் பண்டுகளின் பங்களிப்புகளே இந்த உயர்வுக்கு காரணம்.
15
செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட செமிகண்டக்டர்களை சீனாவிற்கு விற்பதன் வாயிலாக கிடைக்கும் வருவாயில் 15 சதவீதத்தை அமெரிக்க அரசிடம் ஒப்படைக்க, என்விடியா மற்றும் ஏ.எம்.டி., நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.