ADDED : ஆக 13, 2025 11:59 PM

6
தென்னிந்தியாவில் புதிதாக திறக்கப்பட உள்ள 6 ஹோட்டல்களை நிர்வகிப்பது தொடர்பாக, பிரிகேட் ஹோட்டல், மேரியட் இன்டர்நேஷனல் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில், சென்னை, பெங்களூரு மற்றும் கேரளாவில் தலா 2 ஹோட்டல்கள் இடம்பெறும். இதன் வாயிலாக மேரியட் இன்டர்நேஷனல் நிர்வகிக்கும் ஹோட்டல்களின் எண்ணிக்கை 8 ஆகவும், அறைகளின் எண்ணிக்கை 1,388 ஆகவும் அதிகரிக்கும்.
3
ஆன்லைன் பேமென்ட் சேவைகளை வழங்க, பேடிஎம் நிறுவனத்துக்கு ஆர்.பி.ஐ., மீண்டும் அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்று பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை,வர்த்தக நேரத்தின் போது 6 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டது. கடந்த 2022 நவம்பரில் புதிய உறுப்பினர்களை சேர்க்க விதித்த தடையையும் ஆர்.பி.ஐ., திரும்ப பெற்றுள்ளது. வர்த்தக முடிவில், ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள், 3 சதவீத உயர்வுடன் நிறைவு செய்தன.
5 2 6
தவறாக ஒப்பந்தத்தை முடித்து கொ ண்ட தற்காக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ப்ரா வுக்கு 526 கோடி ரூபாய் செலுத்த, ஆரவல்லி பவர் நிறுவனத்துக்கு, மூன்று உறுப்பினர்கள் கொண்ட நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ல் ரிலையன்ஸ் இன்ப்ரா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றம்சாட்டிய ஆரவல்லி பவர் நிறுவனம், தன்னிச்சையாக ஒப்பந்தத்தை முடித்து கொள்வதாக கூறி, நீதிமன்றத்தை நாடியிருந்தது.