ADDED : ஜூலை 04, 2026 07:12 AM

63,35,800
கடந்த ஜூன் 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 53,713 கோடி ரூபாய் குறைந்து 63.35 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது என ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
1,00,000
நடப்பு நிதியாண்டில் நாட்டின் சரக்கு ஏற்றுமதி 16 - 17 சதவீதம், சேவை துறை 11 சதவீதம் என இலக்கு நிர்ணயித்துள்ளது மத்திய வர்த்தக அமைச்சகம். மொத்த ஏற்றுமதி 1 லட்சம் கோடி டாலர் என இலக்கு நிர்ணயித்துள்ளது.
5
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏ.ஐ., அமெரிக்க அரசுக்கு 5 சதவீத பங்கை வழங்குவது குறித்து, அந்நாட்டு அரசு அதிகாரிகளுடன் முதற்கட்ட ஆலோசனையை தொடங்கியுள்ளது.
63,60,000
கடன் வழங்குபவர்களுக்கான நியாயமான நடைமுறைகள் மற்றும் கே.ஒய்.சி., தொடர்பான சில விதிகளை பின்பற்ற தவறியதற்காக, பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு 63.60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஆர்.பி.ஐ.,
23,00,00,000
சென்னை மாநகரின் தண்ணீர் வினியோகத்திற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்த, ஆசிய வளர்ச்சி வங்கி 23 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதித்துள்ளது. இதன் வாயிலாக 45 லட்சம் குடும்பத்தினர் பயனடைவர் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.
