ADDED : ஜூலை 17, 2026 06:53 AM

428,00,00,000
கடந்த நிதியாண்டில் எக்ஸிம் வங்கி 4,273 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. இந்த நிகர லாபத்தின் 10 சதவீதத்தை அதாவது, 428 கோடி ரூபாயை ஈவுத்தொகையாக மத்திய அரசிடம் எக்ஸிம் வங்கி வழங்கியுள்ளது.
250
இந்தியாவின் உயிரி பொருளாதாரம் 2035ம் ஆண்டுக்குள் 66 லட்சம் கோடி ரூபாயாகவும் 2047ம் ஆண்டுக்குள் 250 லட்சம் கோடி ரூபாயாகவும் வளர்ச்சியடையும் என்று நிடி ஆயோக் தெரிவித்துள்ளது.
100,00, 00,000
சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பயனடையும் மக்களின் எண்ணிக்கை கடந்த 2015ம் ஆண்டில் 25 கோடியாக இருந்த நிலையில், தற்போது 100 கோடியை கடந்துள்ளது என மத்திய தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
16,30,000
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் விற்பனை, ஜூலை 1 முதல் 15 வரை 16.30 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 13.30 லட்சம் டன்னாக இருந்தது.
100
ஒனிடா நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுதும் 100 பிரத்யேக கடை திறக்க உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி ஆண்டுக்கு 7 சதவீதம் அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
