தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி


ADDED : ஜூலை 19, 2026 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 03:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

91,50,00,000

கடந்த ஜூலை 10ம் தேதி நிலவரப்படி நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 91.50 கோடி ரூபாய் அதிகரித்து 64 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

76,000

வெளிநாட்டு நாணய மாற்றமில்லா வங்கி வைப்பு நிதி திட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர் 76,000 கோடி ரூபாய் வரை வங்கிகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாக ஆர்.பி.ஐ., தகவல் தெரிவிக்கிறது.

28,840

மண்டல விமான போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், திருத்தி அமைக்கப்பட்ட 'உடான்' திட்டத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு 28,840 கோடி ரூபாய் நிதி வழங்கவுள்ளது.

360

மத்திய பொதுத்துறை நிறுவனமான பி.ஹெச்.இ.எல்., மின்சார லாரிகள், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் 360 கிலோவாட்., அதிவேக சார்ஜர்களை உற்பத்தி செய்ய உள்ளது.

1,400

ஜே.எஸ்.டபுள்யூ., எம்.ஜி., மோட்டார் நிறுவனம், தனது கார் உற்பத்தியை விரிவாக்கம் செய்ய நடப்பு நிதியாண்டில் 1,400 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us