தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'டிஜிட்டல் வளர்ச்சிக்கு இ- - காமர்ஸ் கவுன்சில்'

 'டிஜிட்டல் வளர்ச்சிக்கு இ- - காமர்ஸ் கவுன்சில்'

 'டிஜிட்டல் வளர்ச்சிக்கு இ- - காமர்ஸ் கவுன்சில்'


ADDED : ஜூலை 19, 2026 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 03:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய இணைய மற்றும் மொபைல் சங்கம், ஐ.ஏ.எம்.ஏ.ஐ., ஆனது, 11.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, இந்திய டிஜிட்டல் வர்த்தக சூழலை மேலும் வலுவாக்கும் நோக்கில், இ.சி.சி.ஐ., எனும் இந்திய இ- - காமர்ஸ் கவுன்சிலை துவக்கியுள்ளதாக அதன் தலைவர் சுபோ ராய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

அரசு, தொழில்துறையினரின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் வர்த்தக துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இ.சி.சி.ஐ., எனும் இந்திய இ- - காமர்ஸ் கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் அமேசான், பிளிப்கார்ட், இந்தியாமார்ட், இக்ஸிகோ, உபர், ரேபிடோ, ஷிப்ராக்கெட், ஈபே, அர்பன் கம்பெனி, மீஷோ உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்துள்ளன.

மேலும், கொள்கை வகுப்பாளர்கள், இ- - காமர்ஸ் தளங்கள், சில்லரை விற்பனையா ளர்கள், தளவாட நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடன் இணைந்து, நாட்டின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை எதிர்காலத்திற்கு வடிவமைக்கும் வகையில் முக்கிய தளமாக இந்த கவுன்சில் செயல்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us