உள்ளடக்கத்திற்கு செல்ல

தொழில் வளர்ச்சி குறியீடு பட்டியலில் இரும்பு தாது
தொழில் வளர்ச்சி குறியீடு பட்டியலில் இரும்பு தாது
ADDED : ஜூலை 18, 2026 06:41 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: நாட்டின் முக்கிய கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி குறியீடு அட்டவணையில் 8 ஆக இருந்த துறைகளின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இரும்பு தாது துறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் பொருளாதார செயல்பாட்டை மேலும் சிறப்பாக கணிப்பதற்கு முக்கிய துறைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது உதவும் என்று கூறப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், பெட்ரோலிய சுத்திகரிப்பு, சிமென்ட், மின்சாரம், இயற்கை எரிவாயு, உரங்கள், ஸ்டீல், நிலக்கரி ஆகிய 8 துறைகள் ஏற்கனவே இந்த பட்டியலில் உள்ளன. தற்போது ஒன்பதாவதாக இரும்பு தாது சேர்க்கப்பட்டுள்ளது.
