ADDED : ஜூலை 21, 2026 06:58 AM

37,500
நிலக்கரியை வாயுவாக மாற்றும் திட்டங்களை ஊக்குவிக்கும் மத்திய அரசின் 37,500 கோடி ரூபாய் திட்டத்துக்கான முன் விண்ணப்ப ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் பங்கேற்றன.
74,000
கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது பல்வேறு தொழில்களில் மூலதனச் செலவாக கிட்டத்தட்ட 74,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி வாய்ப்பில் குழுமத்துக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுவதாக அதன் தலைவர் குமார மங்கலம் பிர்லா தெரிவித்தார்.
55,49,00,000
கடந்த ஜூன் மாதம் வரை, யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை தளத்தில் 55,49,00,000 பயனர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
1,99,000
அன்னிய செலாவணி வரவை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள சலுகை 'ஸ்வாப்' வசதியின் கீழ், ஜூலை 17 வரை கிட்டத்தட்ட 1,99,000 கோடி ரூபாய் வந்துள்ளதாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
9,64,000
இந்தியாவின் சிப் சந்தை 2030 - 31க்குள் 9.64 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 8 - 10 சதவீத தேவையை பூர்த்தி செய்ய முடியும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
