ADDED : ஜூலை 31, 2026 06:42 AM
12,207
எல்.ஐ.சி., கடந்த நிதியாண்டுக்கான டிவிடெண்டாக அரசுக்கு 12,207.25 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு, 59.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
55,000
ஹரியானா அரசின் சிறுதொழில் கொள்கை வாயிலாக 55,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பதோடு, 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
5,400
கடந்த ஏப்., - ஜூனில் 5,400க்கும் மேற்பட்ட புதிய பணியாளர்களை, முன்னணி ஐ.டி., நிறுவனங்கள் பணி அமர்த்தியுள்ளன. இவற்றில், டி.சி.எஸ்., நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
20
நாட்டின் சில்லரை வணிக இடங்களுக்கான குத்தகை பரிவர்த்தனைகள், ஜூலை மாதத்தில் 20 சதவீதம் அதிகரித்து, 39 லட்சம் சதுர அடியாக உயர்ந்துள்ளன.
0.8
நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவு, ஜி.டி.பி.,யில் 0.80 சதவீதத்தை கடந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு பின் அளவை எட்டியுள்ளது. இதில், தனியாரின் பங்கு 51.80 சதவீதம்.
