ADDED : ஜூலை 31, 2026 06:43 AM

டிரெண்ட்லைனை கையகப்படுத்தும் 5 பைசா
முதலீட்டு சேவை தளமான 5 பைசா கேபிட்டல், நிதி பகுப்பாய்வு மற்றும் ஏ.ஐ., சேவைகளை வழங்கும் டிரெண்ட்லைன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான கிஸ்கார்டு டேட்டாடெக்கை, 207 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இதற்கு, இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது, 5 பைசாவின் டிஜிட்டல் முதலீட்டு சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி புதிய ஆலையில் உற்பத்தி தொடக்கம்
மாருதி சுசூகி இந்தியா, குஜராத்தின் ஹன்சல்பூர் வளாகத்தில் அமைந்துள்ள தன் நான்காவது ஆலையில் வர்த்தக ரீதியிலான உற்பத்தியை தொடங்கியுள்ளது. இந்த புதிய ஆலை வாயிலாக ஆண்டுக்கு 2.50 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும். அந்த வகையில் ஹன்சல்பூர் வளாகத்தின் மொத்த உற்பத்தி திறன், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களாக உயர்ந்துள்ளது.
900 மெகாவாட் மின் திட்டம் அமைக்கும் என்.ஐ.ஆர்.எல்.,
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான என்.ஐ.ஆர்.எல்., குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்திடமிருந்து, 900 மெகாவாட் சூரிய மின் திட்டத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்த திட்டம், குஜராத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோ டிஜிட் இன்சூரன்ஸில் முதலீடு செய்த ஐ.சி.ஐ.சி.ஐ.,
ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு நிறுவனம், கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 1 சதவீத பங்குகளை 139 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்த பங்குகளை, பீக் 15 பார்ட்னர்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த பங்கு பரிவர்த்தனை, தேசிய பங்குச் சந்தையில் தனி வர்த்தக சாளரம் வாயிலாக நடைபெற்றது.
டியோர் பார்மசூட்டிகல்ஸ் உரிமம் நிறுத்தி வைத்த எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,
பஞ்சாபில் செயல்படும் டியோர் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் ஊட்டச்சத்து பொருட்கள் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி, சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளில் கடுமையான மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதையடுத்து, அதன் தயாரிப்பு உரிமத்தை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
டிரெண்ட்லைனை கையகப்படுத்தும் '5 பைசா'
முதலீட்டு சேவை தளமான 5 பைசா கேபிட்டல், நிதி பகுப்பாய்வு மற்றும் ஏ.ஐ., சேவைகளை வழங்கும் டிரெண்ட்லைன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான கிஸ்கார்டு டேட்டாடெக்கை, 207 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இதற்கு, இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது, 5 பைசாவின் டிஜிட்டல் முதலீட்டு சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
900 மெகாவாட் மின் திட்டம் அமைக்கும் என்.ஐ.ஆர்.எல்.,
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான என்.ஐ.ஆர்.எல்., குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்திடமிருந்து, 900 மெகாவாட் சூரிய மின் திட்டத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்த திட்டம், குஜராத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி புதிய ஆலையில் உற்பத்தி தொடக்கம்
மாருதி சுசூகி இந்தியா, குஜராத்தின் ஹன்சல்பூர் வளாகத்தில் அமைந்துள்ள தன் நான்காவது ஆலையில் வர்த்தக ரீதியிலான உற்பத்தியை தொடங்கியுள்ளது. இந்த புதிய ஆலை வாயிலாக ஆண்டுக்கு 2.50 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும். அந்த வகையில் ஹன்சல்பூர் வளாகத்தின் மொத்த உற்பத்தி திறன், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களாக உயர்ந்துள்ளது.
கோ டிஜிட் இன்சூரன்ஸில் முதலீடு செய்த ஐ.சி.ஐ.சி.ஐ. ,
ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு நிறுவனம், கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 1 சதவீத பங்குகளை 139 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்த பங்குகளை, பீக் 15 பார்ட்னர்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த பங்கு பரிவர்த்தனை, தேசிய பங்கு சந்தையில் தனி வர்த்தக சாளரம் வாயிலாக நடைபெற்றது.
