ADDED : ஆக 22, 2026 07:07 AM

92,000
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தை விட 92,000 கோடி ரூபாய் உயர்ந்து 68.10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
62
செமி கண்டக்டர், எலக்ட்ரானிக்ஸ், டிஜிட்டல் மற்றும் ஏ.ஐ., உள்ளிட்ட தொழில்நுட்ப மையங்கள் அமைக்க 41 முதல் 62 ஏக்கர் நிலம் தேவை என டில்லி அரசின் தகவல் தொழில்நுட்ப துறை கோரியுள்ளது.
4,895
சீன பங்குதாரரை கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் 10 சதவீதம் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, 4,895.65 கோடி ரூபாய் மதிப்பிலான 29 அன்னிய நேரடி முதலீட்டு முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன.
3,080
நாட்டின் முதல் பெரிய அளவிலான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் பயோ பாலிமர் ஆலை, உ.பி.,யில் 3,080 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
62,500
மத்திய அரசு 62,500 கோடி ரூபாய் மதிப்பிலான மொபைல்போன் உற்பத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி நிறுவனங்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
