ADDED : ஆக 22, 2026 07:06 AM

புதுடில்லி: இந்திய தனியார் துறை நிறுவனங்களின் செயல்பாடுகளின் வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் சிறிதளவு உயர்ந்துள்ளதாக, ஹெச்.எஸ்.பி.சி., வங்கி வெளியிட்டுள்ள, 'பிளாஷ் இந்தியா கூட்டு பி.எம்.ஐ.,' குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் விபரம்:
தயாரிப்பு மற்றும் சேவைகள் துறை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு இம்மாதம் 54.60 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஜூலை மாதம், 54.3 புள்ளிகளாக இருந்தது. இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் அது வளர்ச்சியை குறிக்கும்.
ஹெச்.எஸ்.பி.சி., பிளாஷ் இந்தியா தயாரிப்புத் துறை பி.எம்.ஐ., குறியீடு ஜூலையில் 53.50 ஆக இருந்தது, ஆகஸ்டில் 52.9 ஆக குறைந்துள்ளது. அதேவேளையில், பிளாஷ் இந்தியா சேவை துறை பி.எம்.ஐ., வணிக நடவடிக்கை குறியீடு ஜூலையில் 53.30 ஆக இருந்தது, ஆகஸ்டில் 54.5 ஆக உயர்ந்துள்ளது.
