ADDED : ஆக 27, 2026 07:31 AM
6,00,000
கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
10,176
கிராமப்புற வங்கிகளின் மொத்த வர்த்தகம் 13.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்த நிலையில், கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 10,176 கோடி ரூபாய் லாபம் ஈட்டின.
9,000
யு.பி.ஐ., மற்றும் டெபிட் கார்டு பண பரிவர்த்தனை அதிகரித்ததன் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 9,000 ஏ.டி.எம்., மூடப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
3,000
ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் ஆபர் பார் சேல் பங்கு விற்பனை வாயிலாக அரசுக்கு 3,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
23.20
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை வெளிநாடு வாழ் இந்தியர்களின் டிபாசிட், ஆண்டு அடிப்படையில் 23.20% ஆக குறைந்து 26,362 கோடி ரூபாயானதாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
