தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சிறு, குறு நிறுவனங்களுக்கு விற்பனையாளர் சந்திப்பு

 சிறு, குறு நிறுவனங்களுக்கு விற்பனையாளர் சந்திப்பு

 சிறு, குறு நிறுவனங்களுக்கு விற்பனையாளர் சந்திப்பு


ADDED : ஆக 27, 2026 07:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவதற்காக, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்றும், 27ம் தேதி, நாளையும், 28ம் தேதி விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வை, மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், தமிழக அரசுடன் இணைந்து நடத்துகிறது.

இதில், அரசு நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருட்கள், வணிகம் மேற்கொள்வதற்கான வழிவகைகள் குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தெரிவிக்க உள்ளன. மத்திய அரசின், 'ஜெம் போர்டலில்' பதிவு செய்து பொதுத்துறை நிறுவனங்களின், 'டெண்டரில்' பங்கேற்பது, அரசு திட்டங்கள், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்தும் தெரிவிக்கப்பட உள்ளன. இதில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் பங்கேற்று, பயன்பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us