உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 08, 2026 12:00 AM
ADDED : அக் 07, 2026 10:44 PM
அ நிறம் | அளவு
ரிசர்வ் வங்கி, அடுத்ததாக வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் பணக்கொள்கை குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம உயர்த்தும் என எஸ்.பி.ஐ., வங்கியின் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம்:
பணவீக்கம் அதிகரிக்கும் போக்கு தற்போது தீவிரமடைந்து வருவதால், வரும் டிசம்பர் மாத கூட்டத்தில், உலகளாவிய சூழலை பொறுத்து, ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவீதம் என்ற பெரிய அளவில் உயர வாய்ப்புள்ளது. உலகளாவிய பொருளாதார சூழல் அதிக ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தற்போது 5.50 சதவீதமாக உள்ள ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவீதமாக உயர்த்துவது என்பது சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.
