UPDATED : அக் 08, 2026 12:00 AM
ADDED : அக் 07, 2026 10:44 PM
அ ன்னிய செலாவணி வைப்பு நிதி திட்டத்தின் வாயிலாக திரட்டப்பட்ட 133 பில்லியன் டாலரால் ஏற்படும் செலவுகளை விட, அதனால் கிடைக்கும் பொருளாதார நன்மைகளே மிக முக்கியம் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல் ஹோத்ரா தெரிவித்துள்ளார். நமது பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ளதால், இந்த நிதியை திருப்பி செலுத்துவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“தற்போது வங்கிகளில் அதிகளவில் தேங்கியுள்ள உபரி பணப்புழக்கமானது, நடப்பு நிதியாண்டிற்குள்ளாகவே ரிசர்வ் வங்கியின் பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக திருப்பி எடுக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும். மேலும், பெருமளவில் கிடைத்து ள்ள இந்த வைப்பு நிதியை வங்கிகள் அவசரப்பட்டு கடனாக வழங்காமல், தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்,” எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
