ADDED : ஜன 03, 2025 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக, 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பு கிடைக்க, அடுத்த மாதம், 21, 22ல் உலக ஸ்டார்ட்அப் மாநாட்டை, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., சென்னையில் நடத்துகிறது.
இதில் பங்கேற்பதற்காக பின்லாந்து, டென்மார்க், துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.