ADDED : ஏப் 18, 2025 11:07 PM

புதுடில்லி:யு.பி.ஐ., வாயிலாக மேற்கொள்ளப்படும் 2,000 ரூபாய்க்கு கூடுதலான பரிவர்த்தனைகளுக்கு, ஜி.எஸ்.டி., வசூலிக்கும் திட்டம் ஏதும் இல்லை என, மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஜி.எஸ்.டி., வசூலிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், இவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்றும், ஆதாரமற்றது என்றும் நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. தற்போதைக்கு, அரசு இதுகுறித்து பரிசீலிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
யு.பி.ஐ., வாயிலாக ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும்; இதன் ஒரு பகுதியாக கடந்த 2021 - 22ம் நிதியாண்டு முதல் குறைந்த மதிப்பிலான யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு, வர்த்தகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.