ADDED : ஆக 26, 2025 12:39 AM
புதுடில்லி: இந்தியாவில் தொழில் துறையின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு விரிவாக்கம் போன்ற காரணங்களால், தாமிரத்துக்கு தட்டுப்பாடு வரலாம் என்று, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
வரும் 2050-ம் ஆண்டில், சர்வதேச அளவில் தாமிரத்துக்கான தேவை 5 கோடி டன்னாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில், உள்நாட்டு உற்பத்தி மற்றும் மறுசுழற்சி திறனை இந்தியா உடனடியாக அதிகப்படுத்தாவிட்டால், தேவையான தாமிரத்தை பெற இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.
இந்த சூழலில், துாத்துக்குடியில் உள்ள உருக்காலையும் மூடப்பட்டதால் 40 சதவீத உற்பத்தி குறைந்து, அதிக அளவில் இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தாமிர சப்ளையில் சீனா 44 சதவீதம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எதிர்காலத்தில் தட்டுப்பாடு வர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.