தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சரக்கு கையாள்வதில் சிக்கல்களுக்கு தீர்வு துாத்துக்குடி துறைமுக அதிகாரி பேச்சு

 சரக்கு கையாள்வதில் சிக்கல்களுக்கு தீர்வு துாத்துக்குடி துறைமுக அதிகாரி பேச்சு

 சரக்கு கையாள்வதில் சிக்கல்களுக்கு தீர்வு துாத்துக்குடி துறைமுக அதிகாரி பேச்சு


ADDED : ஆக 23, 2026 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 01:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: ''துாத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை கையாள்வதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணப்படும்,'' என, துாத்துக்குடி சுங்கவரி முதன்மை கமிஷனர் தேவேந்திர நாக்வெங்கர் தெரிவித்தார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், சுங்கவரித்துறை சேவைகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான இடர்பாடுகளுக்கு தீர்வு காண் பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அதில் அவர் கூறுகையில், “வர்த்தகத்தை எளிதாக்குவதுடன், ஏற்றுமதியாளர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி மையமாக திருப்பூர் முன்னேறியுள்ளது. துாத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை கையாள்வதி ல் ஏற்படும் சிக்கல்கள் குறித்து, ஏற்றுமதியாளர்கள் நேரடியாக தெரிவிக்கலாம். அவற்றுக்கு உரிய தீர்வு காணப்படும்” என்றார்.

ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் பேசுகையில், ''துாத்துக்குடி துறைமுகத்தை ஆழப் படுத்தி, பெரிய சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மேம்படுத்த வேண்டும்'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us