ADDED : பிப் 19, 2025 10:56 PM

சென்னை:தமிழகத்தை வரும், 2030க்குள், 86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, அதாவது ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவெடுக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, புதிய முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, தமிழக தொழில் துறையில் நிலவும் பிரச்னை, அவற்றுக்கு காண வேண்டிய தீர்வு உள்ளிட்டவை தொடர்பாக, ஜெர்மனியின், 'பிரான்ஹாபர் இன்ஸ்டிடியூட்' உடன் இணைந்து, தொழில் துறையை ஆய்வு செய்யும் பணியில், 'டிட்கோ' நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, உற்பத்தி உள்ளிட்ட ஒவ்வொரு துறையினரிடமும் கருத்து, ஆலோசனை கேட்கப்பட உள்ளன.
இதுகுறித்து, டிட்கோ அறிக்கையில், 'பிரான் ஹாபர் உடன் இணைந்து, தமிழகத்தில் புதுமை மற்றும் அறிவு சூழல் அமைப்பு ஆய்வு செய்யப்படுகிறது; இது, தொழில் துறைக்கும், ஆராய்ச்சிக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, வலுவான, புதுமையான தமிழகத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது' என, தெரிவித்து உள்ளது.

