sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு திருப்பூர் பின்னலாடை அதிக பங்களிப்பு

/

ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு திருப்பூர் பின்னலாடை அதிக பங்களிப்பு

ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு திருப்பூர் பின்னலாடை அதிக பங்களிப்பு

ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு திருப்பூர் பின்னலாடை அதிக பங்களிப்பு

1


ADDED : அக் 19, 2025 03:12 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:12 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'டாப் 10' நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதியில், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது; அதிகபட்சமாக, போலந்துக்கு ஆடை ஏற்றுமதி 35 சதவீதம் உயர்ந்து உள்ளது.

நம் நாட்டில், நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களான, ஏப்., - ஜூலை, 47,124 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது; இதில், 'டாப் 10' நாடுகளுக்கு மட்டும், 36,354 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நம்பிக்கை நீண்ட இடைவெளிக்கு பின், போலந்து, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், போலந்துக்கு ஏற்று மதி 856 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்தாண்டு, 1,175 கோடியாக உயர்ந்துள்ளது; இது, 37.70 சதவீதம் அதிகம்.

ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான ஏற்றுமதி 3,125 கோடியில் இருந்து, 3,740 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது; இது, 18 சதவீதம் அதிகம்.

இத்தாலிக்கு ஏற்றுமதி, 951 கோடி ரூபாயில் இருந்து, 1,122 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது; இது, 16 சதவீதம் அதிகம்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இருந்து வந்த ஐரோப்பிய யூனியனுக்கு உட்பட்ட நாடுகளுக்கும், இந்திய ஆடை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.

பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்காவுடனான தற்காலிக வர்த்தக இழப்பை விரைவில் சரிக்கட்டி விடலாம் என்று, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., அதிகாரி கள் கூறுகையில், 'நடப்பு நிதியாண்டில் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், போலந்து, இத்தாலி, சவூதி அரேபியா ஆகியவை, 'டாப் 10' நாடுகள் பட்டியலில் இருக்கின்றன.

ஏப்., துவங்கி ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், அனைத்து நாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி முன்பு இருந்தை காட்டிலும் அதிகரித்துள்ளது' என்றனர்.

61 சதவீதம்

நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், திருப்பூரில் இருந்து மட்டும், ஏப்., - 3,260 கோடி, மே - 3,924 கோடி, ஜூன் - 3,622 கோடி, ஜூலை - 3,834 கோடி என, 14,640 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பின்னலாடை ஏற்றுமதி, ஏப்., - ஜூலை மாதங்களில், 24,000 கோடி ரூபாயை எட்டியிருந்தது. அதன்படி, நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூரின் பங்களிப்பு, 61 சதவீதமாக அதிகரித்து உள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'பொதுவாக, செப்., அக்., மற்றும் நவ., மாதங்களில், ஆடை ஏற்றுமதி குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. டிச., துவங்கி மார்ச் வரை, ஏற்றுமதி வளர்ச்சி பெறுவதும் வழக்கம். 'அதன்படி, கோடைக்கால ஆர்டர்கள் ஒப்பந்தம் செய்யும் முன்னதாக, அமெரிக்க கூடுதல் வரி பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்' என்றனர்.








      Dinamalar
      Follow us