UPDATED : அக் 19, 2025 03:16 AM
ADDED : அக் 19, 2025 03:09 AM

புதுடில்லி: இந்த ஆண்டின் தீபாவளி பரிசுகளில் ஒன்றாக, உறவினர்கள் நண்பர்களுக்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ் பரிசளிக்கலாம் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையமான என்.எச்.ஏ.ஐ., அழைப்பு விடுத்துள்ளது.
![]() |
இதுகுறித்து அதன் செய்திக் குறிப்பு:
தீபாவளி பரிசு பட்டியலில் வருடாந்திர பாஸ்டேக் பாஸ் தேர்வு செய்யப்படலாம். ராஜ்மார்க்யாத்ரா செயலி வாயிலாக, உறவினர்கள், நண்பர்களுக்கு 3,000 ரூபாய் மதிப்புள்ள பாஸ்டேக் பாஸ் பரிசளிக்கலாம்.
அதன் வாயிலாக, அன்புக்குரியவர் ஆண்டு முழுதும், பாஸ்டேக் கணக்கில் பாலன்ஸ் இல்லை என்ற பிரச்னையில்லாமல் மகிழ்ச்சியான பயணம் மேற்கொள்ள உதவலாம்.
![]() |
பாஸ்டேக் பாஸ் விலை: 3,000 ரூபாய் ஓராண்டு (அ) 200 முறை சுங்க சாவடியை கடக்கலாம் உச்சவரம்பை தாண்டினால், வழக்கமான ரீசார்ஜ் முறைக்கு மாறி விடும் யு.பி.ஐ., டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்க்கிங் வாயிலாக பணம் செலுத்தலாம் ஆக.,15ல் அறிமுகம்; பயனாளி எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியது
எப்படி பரிசளிப்பது? ராஜ்மார்க்யாத்ரா செயலியை திறக்கவும். டோல் ரோடு தகவலை தேர்ந்தெடுக்கவும். ஆன்வல் பாஸ் என்ற பகுதியை தேர்வு செய்யவும் ஆட் பாஸ் என்பதை கிளிக் செய்து, பரிசு பெறுபவரின் வாகன எண், தொடர்பு முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை பதிவிடவும் செல்போனில் வரும் ஓ.டி.பி.,யை பதிவிட்டதும், பரிசு பெறுபவரின் பாஸ்டேக் கணக்கில் வருடாந்திர பாஸ் செயலாக்கப்பட்டு விடும்.