பொம்மை, ஏசி, காலணி தரக்கட்டுப்பாட்டு விதி தளர்வு
பொம்மை, ஏசி, காலணி தரக்கட்டுப்பாட்டு விதி தளர்வு
ADDED : ஜூன் 26, 2026 11:27 PM

புதுடில்லி: பொம்மைகள், ஏசி, காலணி உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கான கடுமையான தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகளில் தளர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
விளையாட்டுப் பொருட்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், ஏசி, வாஷிங் மெஷின், வாட்டர் ஹீட்டர், காலணிகள் உள்ளிட்ட பத்து வகையான பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கடுமையான தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்குப் பதிலாக மாற்று வழிமுறை அனுமதிக்கப்படுகிறது. 'தாராளமயமாக்கல்' எனும் இந்த இடைக்காலத் திட்டம், உற்பத்தியாளர்கள் முழுமையான தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்கு மாறும் வரை, அதாவது ஐந்து ஆண்டுகள் நடப்பில் இருக்கும்.
இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உரிமங்கள் தொடக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்; அதன் பின்னர் அவற்றை புதுப்பித்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
