அக்டோபர் மாத கார் விற்பனை டொயோட்டா, மஹிந்திரா வளர்ச்சி
அக்டோபர் மாத கார் விற்பனை டொயோட்டா, மஹிந்திரா வளர்ச்சி
ADDED : நவ 01, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கடந்த அக்டோபர் மாத பயணியர் வாகன விற்பனை குறித்த தகவல்களை நிறுவனங்கள் நேற்று வெளியிட்டன. மாருதி சுசூகி நிறுவனத்தின் கடந்த மாத விற்பனை ஐந்து சதவீதம் சரிந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையிலும் பெரிய மாற்றமில்லை.
வாகன விற்பனை நிலையங்களில் கூடுதலான வாகனங்கள் தேங்கி கிடப்பதால், இருப்பை குறைக்கும் விதமாக, புதிய வாகனங்களின் வினியோகத்தை குறைத்ததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மஹிந்திரா, டொயோட்டா, ஜே.எஸ்.டபுள்யு., நிறுவனங்களின் விற்பனை வலுவான வளர்ச்சி கண்டன.
ஹூண்டாய், மஹிந்திரா நிறுவங்களின் எஸ்.யு.வி., கார் விற்பனை வலுவாக இருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை கடந்த மாதமும் சரிந்துள்ளது.