ADDED : ஜூன் 12, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் நிறைவடையும் நிலையில் உள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனுடன் பேச்சு 90 சதவீதம் முடிந்த நிலையில், வரியல்லாத, மற்ற வர்த்தக தடைகள் குறித்து இருதரப்பும் பேசி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். சுவீடனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கோயல், அந்நாட்டு வர்த்தக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.