
1 ஜிகா வாட் சோலார் பேனல்கள்ரூ.1,500 கோடிக்கு ஆர்டர்
'சாத்வீக் கிரீன் எனர்ஜி' நிறுவனம், 1 ஜிகா வாட் சூரிய மின் சக்திக்கான பி.வி., மின் தகடுகளை வழங்குவதற்காக, 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
என் - டாப்கான் சோலார் பி.வி., எனப்படும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய 1 ஜிகா வாட் சூரிய மின் சக்தி உற்பத்திக்கு தேவையான மின் தகடுகளை வழங்கிட, முன்னணி எரிசக்தி உற்பத்தியாளரிடம் இருந்து 1,500 கோடி ரூபாய்க்கான மதிப்பில் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இ.டி.எப்., முதலீட்டில்
டிசம்பரில் ஜொலிக்காத தங்கம்
தங்க இ.டி.எப்., முதலீடு, டிசம்பரில் கடந்த 9 மாதங்களில் இல்லாத வகையில் குறைந்து, 640 கோடி ரூபாயாக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. பங்குச் சந்தையில் வர்த்தகமாகக் கூடிய மின்னணு வடிவிலான தங்க இ.டி.எப்.,களில் நிகர முதலீடு, கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு டிசம்பரில் சரிவு கண்டதாக, இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக தங்க இ.டி.எப்., முதலீடு 11,226 கோடி ரூபாயாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

